தெரிந்ததை போல நடிப்பதை காட்டிலும் தெரிந்து கொள்வதே எளிதாய் இருப்பதை தெரிந்து கொண்டேன் தெரியாத்தனமாய் .....!
Kadal Kavidai
Tuesday, September 7, 2010
அறிவியல்
பிரம்மோஸ் பெயர் வர காரணம் உங்களுக்கு தெரியுமா ???
இந்தியாவில் உள்ள மிக வேகமான நதி பிரம்மபுத்திர மற்றும் ரஷியாவின் அமைதியான நதி மொசெஸ் இவ் இரண்டு நதிகளின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என பெயர் வைத்தார்கள்..
நன்றி :- கலாம் அவர்கள் - அக்னி சிறகுள்
இந்திய அரசு சமிபத்தில் பிரம்மோஸ் சோதனை நடத்தியது .. அதை பற்றி தினமலர்ரில் வந்த செய்தியை இத்துடன் இணைத்து உள்ளேன்
பதிவு செய்தது உங்கள் கண்ணன் @ 07-09-2010 4.40
ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராணுவத்துக்குச் சொந்தமான, ஒருங்கிணைந்த பரிசோதனை வளாகத்தில் (ஐ.டி.ஆர்.,) இருந்து
ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகப் பாயக் கூடிய "சூப்பர்சானிக்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நேற்று காலை 11.35 மணியளவில் சந்திப்பூரிலிருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைக் குறிதவறாமல் தாக்கும் இந்த ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிகமாக பாயும். மேலும் 300 கிலோ எடையுள்ள போர்க்கருவிகளைத் தாங்கிச் செல்லும் திறன் உடையது. சந்திப்பூர் ஐ.டி.ஆர்., இயக்குனர் எஸ்.பி.தாஸ் கூறுகையில்,"இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது' என்று தெரிவித்தார். ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை, நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தானியங்கி ஏவுகணைத் தளங்களிலிருந்து இலக்கைத் தாக்கும்படி ஏவ முடியும். இதன் மூலம் 10 மீட்டருக்கும் குறைந்த உயரம் கொண்ட எதிரி இலக்கைக் குறிதவறாமல் தாக்க முடியும். பிரமோசின் முதல்கட்ட பரிசோதனை 2001 ஜூன் 12ம் தேதி சந்திப்பூரிலும், ஒரிசா கடற்கரையில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., ரன்வீர் என்ற கப்பலில் இருந்து இறுதிக்கட்ட பரிசோதனை கடந்த மார்ச் 21ம் தேதியும் நடத்தப்பட்டன. தற்போது ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இனி அடுத்த கட்டமாக, "பிரமோஸ் பிளாக் -2' என்ற தரைப்பகுதி இலக்கைத் தாக்கும் ஏவுகணை தயாரிப்பு இருக்கும். இது நகர்ப்புற பகுதிகளில் கூட குறிப்பிட்ட சிறிய பகுதிகளில் அமைந்த இலக்கைத் தாக்கும் திறன் பெற்றது. பயங்கரவாதிகள் முகாம் போன்ற இலக்குகளையும் தாக்க வசதியாக இது இருக்கும் என்று கூறப்பட்டது.
Labels:
கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தகவல்
ReplyDelete