Kadal Kavidai

Thursday, September 9, 2010

ரௌத்திரம் பழகு


வருகிற சனிக் கிழமை 11-09-2010. பாரதியார் நினைவு தினம் , எனக்கு அவர் எழுத்துகள் , அவர் கோவம் , சிந்தனை மிகவும் புடிக்கும்.... அவ்வாறு சமிபத்தில் அஞ்சாதே படத்துல ஒரு பாட்டு வருமே (கத்தால கண்ணால குத்தாதே ) அந்த பாத்து இல்லைக ... படத்தில் முதலில் வருமே .. அச்சம் தவிர் நையப்புடை ,,,,,, அதில் ரௌத்திரம் பழகு ஒரு வரி வரும்.. அதற்கு மிகுந்த தேடலுக்கு பின் அர்த்தம் கிடைத்தது எனக்கு.... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறான் ....

ரௌத்திரம் பழகு?!


பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்கிறான்,"ரௌத்திரம் பழகு".
கோப்படுவது நல்லதா?இல்லையென்று பதில் தந்தால் பாரதி ஏன் அவ்வாறு சொன்னான்?
பழங்காலக் குரு குலங்களில் போதிக்கப்பட்ட பாடம"ஸத்யம் வத,க்ரோதம் மா குரு"என்பது.இதன் பொருள்"உண்மையே பேசு,கோபம் கொள்ளாதே". அப்படியானால் கோபம் என்ற உணர்வே தேவையில்லையா?

கோபம் இரண்டு வகை.ஒன்று தேவையற்ற,பலனற்ற கோபம்.நமது சக்தியை வீணாக்கும்,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கோபம்.மற்றது நியாயமான கோபம்."சிறுமை கண்டு பொங்குவாய்" என்று பாரதி பாடினானே,அந்தக் கோபம். குழந்தையின் நலனுக்காகத் தாய் படும் கோபம்;மாணவனின் உயர்வு கருதி ஆசிரியர் அடையும் கோபம்.அலுவலகத்தின் வளர்ச்சிக்காக அதிகாரி கொள்ளும் கோபம்.
ஆனால் ஆக்க பூர்வமாக இல்லாமல் அழிவு பூர்வமான கோபம் இருக்கிறதே,அது மற்றவர்களுக்கு மட்டுமன்றி,கோபப் படுபவருக்கும் தீமையே விளைவிக்கும்.

ஒரு அறி்ஞரிடம் அடிமை ஒருவன் இருந்தான்.ஒரு நாள் அவன் கை தவறிச் சூடான தேனீர் நிறைந்த கோப்பையை அறிஞரின் மீது போடு விட்டான்.பயந்து போன அடிமை நடுங்கிக் கொண்டே சொன்னான்,"சொர்க்கம் கோபத்தை அடக்குபவரகளுக்கு உரியது".

அறிஞர் சொன்னார்"நான் கோபமடையவில்லையே"

அடிமை மீண்டும் சொன்னான்"சொர்க்கம் தவறு செய்தாரை மன்னிப்பவர்க்கு உரியது."
அறிஞர் சொன்னார்"நான் உன்னை மன்னித்து விட்டேன்."

அடிமை தொடர்ந்தான்,"எல்லாவற்றுக்கும் மேலாக சொர்க்கம் இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்,"நான் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறேன்."

இது நமக்கெல்லாம் பாடம்.

2 comments: