Kadal Kavidai

Thursday, November 24, 2011

ஜார்ட்-வேர்ட் ப்ராசசர்

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.


இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.


இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.
www.jarte.com/download.htmlஎன்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.

Saturday, November 19, 2011

ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!

நான் எப்போதுமே கொஞ்சம் தாமதம்.


எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!


இதோ----
மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.


இந்த ஆறறிவுகள் எவை?


தொல்காப்பியர் சொல்கிறார்---


“ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே”


மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.


இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.


அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?


திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?


அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?


அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.


வேண்டாம் ஏழாம் அறிவு!


ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.


இனி வேலாயுதம்.


சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.


அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.


முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.


சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!


காக்க காக்க கனக வேல் காக்க!

Sunday, November 13, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி
இது.

108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.


ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.


நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.


இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: ஹிந்து நாளிதழ்

Tuesday, November 8, 2011

இனி இதுவும் நடக்கலாம் ......இனி இதுவும் நடக்கலாம் ......

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!
ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..

http://www.cwire.org/website-value-calculator/
இந்த www.vino-kannan.blogspot.comன் மதிப்பு $67 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 7,857,181
www.alexa.com

Friday, November 4, 2011

யு.எஸ்.பி. ப்ளாஷ் லாக்

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது. இதனை www.montpellier-informatique.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.
நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம். சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.

நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

அனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.

இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.

ப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.

தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.