Kadal Kavidai

Friday, December 23, 2011

வைரமுத்து அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்``படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்''
கவிஞர் வைரமுத்து அறிக்கை


சென்னை, டிச.22-

``முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.



அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

``முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் ïனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

படைப்பாளிகள்

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். ``முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்

Monday, December 19, 2011

எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.



1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த ‘பாசமலர்’ படத்தில் நான் பாடிய “வாராயோ தோழி வாராயோ” என்ற பாடல்தான் அவரை பிரபலமாக்கியது.

அவர் பாடலை கேட்கும் போதே ஆட்டம் தானாக வரும் . அவர் பாடிய பாடல்களில் அதிக பாடல்கள் துள்ளல் இசை பாடல்கள் .(துள்ளல் இசை பாடல்கள் = குத்து பட்டு :- நன்றி இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி ஷுன்முகம் )

சமிபத்தில் ஒஸ்தி படத்தில் இருந்து "கல்லாச கல கலா" என்ற பாடலை TR உடன் இனைந்து பாடியுள்ளார் . இந்த வயதிலும் மிக நன்றாக உள்ளது அவரது குரல் வளம்.


என் நண்பர்கள் பாடலை கேட்டு விட்டு என்னிடம் சொன்னது :-- இந்த தள்ளாத வயதிலும் துள்ளல் இசை பாடல்கள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.

clicl here to hear kalasala kalasala.mp3

Saturday, December 3, 2011

கணினி என்ன பால்?!

இந்திஆசிரியர் பால் வேறுபாடுகளைப் பற்றி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.தமிழ் போல் இல்லாமல் இந்தியில் அஃறிணைக்கும் பால் வேறுபாடுகள் உண்டு.மூக்கு பெண்பால் என்றும் நாக்கு ஆண்பால் என்றும் என்னென்னவோ சொல்வார்கள்.



ஒரு மாணவன் எழுந்து கேட்டான்”ஐயா,கணினி என்ன பால்?”


இதற்குப் பதிலளிக்காமல் ஆசிரியர்,ஆசிரியர் மாணவர்களையும் மாணவிகளையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து அவர்களையே தீர்மானம் செய்து அவர்கள் முடிவுக்கான மூன்று காரணங்கள் எழுதச் சொன்னார்.


மாணவர்கள் கணினி பெண்பால் எனத்தீர்மானித்து அதற்கான கீழ் வரும் காரணங்களை எழுதினார்கள்—


1அவற்றின் உள்ளே உள்ள அடிப்படை ஏரணத்தைப் படைத்தவன் அன்றி வேறொருவரும் அறிய இயலாது.


2.சின்னச் சின்னத்தவறுகள் கூட நீண்ட கால நினைவில் வைத்திருந்து, வேண்டும்போது எடுக்க இயலும்.


3.ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டால் அதன்பின் அதற்கான உபகரணங்களில் பாதிச் சம்பளம் போய் விடும்.



மாணவிகள் அது ஆண் என முடிவு செய்து எழுதினார்கள்—


1.எல்லாத் தகவலும்இருக்கும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது.


2.அவை நமது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்.ஆனால் பாதி நேரம் அவையே பிரச்சினையாகி விடுகின்றன.


3.ஒன்றைச் சொந்தமாக்கிய பின்தான் தெரியும் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் இதை விடச் சிறந்தது கிடைத்திருக்கும் என!


ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.