Kadal Kavidai

Thursday, December 30, 2010

வா வா & தா தா

வா வா & தா தா
இனி எங்கள் வாழ்வில்
அகமலர்ச்சி தான்
ஆனந்த பெருக்கு தான்
இன்ப வெள்ளம் தான்
உற்சாக ஊற்று தான்
எக்களிப்பு தான்
ஏமம் தான்
ஒக்கலிப்புகள் தான்
ஓகை தான்
மொத்தமாக சில்லரையாக சுருக்கமாக
எங்கும் எதிலும் சந்தோஷம் தான்
வா வா புத்தாண்டே வா வா
தா தா புத்து ணர்வினை தா தா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011
- கண்ணன்

Monday, December 13, 2010

இசை பிரியர்களுக்கு மட்டும் .....

கொஞ்ச நாளா வேலை பளு காரணமாக ஒரு பதிவு கூட போட முடியல ...... நண்பர்கள் மனிக்கவும்... இது இசை பிரியர்களுக்கு... அதாவது வானொலி பண்பலை (FM) கேட்பது எனக்கு புடிக்கும்.. உலகில் உள்ள அணைத்து பண்பலை அலைவசிசையும் ஒரு தளத்தில் (Website) உள்ளது ... (Norway, Elam,Canada,Singapore,Srilanka,Germany,London BBC) ஆகிய தமிழ் ஒழிபரப்பு நிகழ்சிகளை கொஞ்சம் கேட்டு பாருங்கள் .....

இணைப்பு

http://www.tamilfms.com/

Wednesday, November 17, 2010

நான் ஒரு நக்சலைட்
" ஆலை அரசுகள் சோலை மிராசுகள்

பாலில் மிதந்தது போதும் - இங்கு

வேலை இழந்தவர் வீதி முனைகளில்

கூழுக்கலைவதை பாரும் - அவர்

கூட்டத்தை ஓரணி சேரும் ......"இவை 1968-69 வாக்கில் என் கவிகுருநாதன் கண்ணதாசன் எழுதிய வரிகள் . அவர் நடத்திய "கண்ணதாசன்" என்ற இலக்கிய இதழில் வெளிவந்தது . இந்த கவிதைக்கு அவர் கொடுத்த தலைப்பு "நான் ஒரு நக்சலிட் !!"


மத்தபடி கவிதை தலைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை

Monday, November 15, 2010

என்ன செய்ய ? - கவிதைகீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.
இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி...


ஆனால்....

பூ விழுந்தால் போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !


Friday, November 12, 2010

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது. இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்? இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை. பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது. இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்? ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'...

Thursday, October 28, 2010

அஞ்சலி


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல


விலகாமல் என்றென்றும்..


29-10-2010 அன்று உன் பிறந்த நாள் நினைவாக....Thursday, October 21, 2010

நன்றிகடந்த 19-10-2010 அன்று என் பிறந்தநாள் அன்று என் Cell Phone , Yahoo,Orkut,Facebook க்கு காலை முதல் மாலை வரை வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் நன்றி....


நாளொன்றும் மற்றைய நாட்களிலிருந்து வேறுபட்டது இல்லை என்றாலும் வழக்கத்திலிருந்து மாற்றாக ஒரு வேறுபடுத்த சில சமயம் தேவையாயிருக்கிறது.

நேற்றைய மாலைக்கு
இன்றைய காலையும்
பிற்பகல் நினைவில்
இன்றைய காலையும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்னால்
திரும்பிப்பார்த்தால் 29 வயசு


Sunday, October 10, 2010

திருமணம்!


திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

Saturday, September 11, 2010

அறிவிப்பு


பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும் எனக்கு சமிபத்துல ஒரு சட்டை அன்பளிப்பாக கிடைத்தது.


அது என் இணைய வழி தங்கை சிந்தியா கொடுத்தது . சிந்தியாவை பற்றி ஒரு அறிமுகம் உங்களுக்கு..

கடந்த முன்று வருடத்துக்கு முன்னால Yahoo Messenger Chat முலமாக அறிமுகமான என் தங்கை ... பிறகு கொஞ்ச நாள் மொபைல் நம்பர் பரிமாறிகிட்டோம் .. அவங்க பொதுவா போன் செய்தாலே அதில் கணினி சந்தகங்களை பற்றி வார்த்தை கண்டிப்பாக இருக்கும் அந்த அளவுக்கு கணினி மீது ஆர்வம் .

சரி அன்பளிப்பு சட்டை எதற்காக ??? என்றால் கடந்த மாதம் ரக்ஷபந்தனுகாக . ராக்கி மற்றும் ஒரு அழகான சட்டையை எனக்கு கிடைத்தது.

சிந்தியாவின் நண்பர்கள் எட்வின் ,ஹேமா,பானு மற்றும் பலர் அது Ever Time Jolly Group..

எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் அக்டோபர்19 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.
1. Sony Digital Camara (12x zoom)
2.APPLE Laptop
3.Kenwood Audio System (For My Car)

மறந்து விடாதீர்கள் October 19 தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும்.

பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என தெரிவித்து கொள்கிறேன்.
Thursday, September 9, 2010

ரௌத்திரம் பழகு


வருகிற சனிக் கிழமை 11-09-2010. பாரதியார் நினைவு தினம் , எனக்கு அவர் எழுத்துகள் , அவர் கோவம் , சிந்தனை மிகவும் புடிக்கும்.... அவ்வாறு சமிபத்தில் அஞ்சாதே படத்துல ஒரு பாட்டு வருமே (கத்தால கண்ணால குத்தாதே ) அந்த பாத்து இல்லைக ... படத்தில் முதலில் வருமே .. அச்சம் தவிர் நையப்புடை ,,,,,, அதில் ரௌத்திரம் பழகு ஒரு வரி வரும்.. அதற்கு மிகுந்த தேடலுக்கு பின் அர்த்தம் கிடைத்தது எனக்கு.... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறான் ....

ரௌத்திரம் பழகு?!


பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்கிறான்,"ரௌத்திரம் பழகு".
கோப்படுவது நல்லதா?இல்லையென்று பதில் தந்தால் பாரதி ஏன் அவ்வாறு சொன்னான்?
பழங்காலக் குரு குலங்களில் போதிக்கப்பட்ட பாடம"ஸத்யம் வத,க்ரோதம் மா குரு"என்பது.இதன் பொருள்"உண்மையே பேசு,கோபம் கொள்ளாதே". அப்படியானால் கோபம் என்ற உணர்வே தேவையில்லையா?

கோபம் இரண்டு வகை.ஒன்று தேவையற்ற,பலனற்ற கோபம்.நமது சக்தியை வீணாக்கும்,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கோபம்.மற்றது நியாயமான கோபம்."சிறுமை கண்டு பொங்குவாய்" என்று பாரதி பாடினானே,அந்தக் கோபம். குழந்தையின் நலனுக்காகத் தாய் படும் கோபம்;மாணவனின் உயர்வு கருதி ஆசிரியர் அடையும் கோபம்.அலுவலகத்தின் வளர்ச்சிக்காக அதிகாரி கொள்ளும் கோபம்.
ஆனால் ஆக்க பூர்வமாக இல்லாமல் அழிவு பூர்வமான கோபம் இருக்கிறதே,அது மற்றவர்களுக்கு மட்டுமன்றி,கோபப் படுபவருக்கும் தீமையே விளைவிக்கும்.

ஒரு அறி்ஞரிடம் அடிமை ஒருவன் இருந்தான்.ஒரு நாள் அவன் கை தவறிச் சூடான தேனீர் நிறைந்த கோப்பையை அறிஞரின் மீது போடு விட்டான்.பயந்து போன அடிமை நடுங்கிக் கொண்டே சொன்னான்,"சொர்க்கம் கோபத்தை அடக்குபவரகளுக்கு உரியது".

அறிஞர் சொன்னார்"நான் கோபமடையவில்லையே"

அடிமை மீண்டும் சொன்னான்"சொர்க்கம் தவறு செய்தாரை மன்னிப்பவர்க்கு உரியது."
அறிஞர் சொன்னார்"நான் உன்னை மன்னித்து விட்டேன்."

அடிமை தொடர்ந்தான்,"எல்லாவற்றுக்கும் மேலாக சொர்க்கம் இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்,"நான் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறேன்."

இது நமக்கெல்லாம் பாடம்.

Wednesday, September 8, 2010

சிந்தனை
வரங்களே சாபங்கள் ஆனால் இங்கு தவங்கள் எதற்காக ???....

கவி கோ அப்துல் ரஹ்மான்

Tuesday, September 7, 2010

அறிவியல்பிரம்மோஸ் பெயர் வர காரணம் உங்களுக்கு தெரியுமா ???
இந்தியாவில் உள்ள மிக வேகமான நதி பிரம்மபுத்திர மற்றும் ரஷியாவின் அமைதியான நதி மொசெஸ் இவ் இரண்டு நதிகளின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என பெயர் வைத்தார்கள்..
நன்றி :- கலாம் அவர்கள் - அக்னி சிறகுள்
இந்திய அரசு சமிபத்தில் பிரம்மோஸ் சோதனை நடத்தியது .. அதை பற்றி தினமலர்ரில் வந்த செய்தியை இத்துடன் இணைத்து உள்ளேன்
பதிவு செய்தது உங்கள் கண்ணன் @ 07-09-2010 4.40


ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராணுவத்துக்குச் சொந்தமான, ஒருங்கிணைந்த பரிசோதனை வளாகத்தில் (.டி.ஆர்.,) இருந்து
ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகப் பாயக் கூடிய "சூப்பர்சானிக்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நேற்று காலை 11.35 மணியளவில் சந்திப்பூரிலிருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. 290 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைக் குறிதவறாமல் தாக்கும் இந்த ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிகமாக பாயும். மேலும் 300 கிலோ எடையுள்ள போர்க்கருவிகளைத் தாங்கிச் செல்லும் திறன் உடையது. சந்திப்பூர் .டி.ஆர்., இயக்குனர் எஸ்.பி.தாஸ் கூறுகையில்,"இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது' என்று தெரிவித்தார். ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை, நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தானியங்கி ஏவுகணைத் தளங்களிலிருந்து இலக்கைத் தாக்கும்படி ஏவ முடியும். இதன் மூலம் 10 மீட்டருக்கும் குறைந்த உயரம் கொண்ட எதிரி இலக்கைக் குறிதவறாமல் தாக்க முடியும். பிரமோசின் முதல்கட்ட பரிசோதனை 2001 ஜூன் 12ம் தேதி சந்திப்பூரிலும், ஒரிசா கடற்கரையில் இந்திய கடற்படையின் .என்.எஸ்., ரன்வீர் என்ற கப்பலில் இருந்து இறுதிக்கட்ட பரிசோதனை கடந்த மார்ச் 21ம் தேதியும் நடத்தப்பட்டன. தற்போது ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இனி அடுத்த கட்டமாக, "பிரமோஸ் பிளாக் -2' என்ற தரைப்பகுதி இலக்கைத் தாக்கும் ஏவுகணை தயாரிப்பு இருக்கும். இது நகர்ப்புற பகுதிகளில் கூட குறிப்பிட்ட சிறிய பகுதிகளில் அமைந்த இலக்கைத் தாக்கும் திறன் பெற்றது. பயங்கரவாதிகள் முகாம் போன்ற இலக்குகளையும் தாக்க வசதியாக இது இருக்கும் என்று கூறப்பட்டது.

Sunday, September 5, 2010

அனுபவக் குறிப்புநாயும் மனிதர்களும்
அதிகாலை நேரத்தில்
கடித்து விடுவாய் என்று நானும் ,
அடித்து விடுவேன் என்று நீயும் !
நினைக்க
இறுதியில் இருவருமே
எதுவுமே செய்யாமல்
பயத்தோடு
விலகி செல்கிறோம்......அது ஒண்ணுமில்லைங்க. காலைல வாக்கிங் போறப்ப ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்க..........

உங்களுக்கும் இது கண்டிப்பா நடந்து இருக்கும்.
இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது

ஆராய்ச்சி

ம‌னித‌ன் குர‌ங்கிலிருந்து பிற‌ந்தான் என்று விஞ்ஞானிக‌ள் நினைத்துக் கொண்டிருந்த‌ போது, இல்லை இல்லை ம‌னித‌ன் க‌ர‌டியிலிருந்தும் பிற‌ந்திருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்தி ஒரு புதிய‌ ஆராய்ச்சிக்கு வித்திட்ட‌வ‌ர்.

நல்ல ஐடியா!

பேரூந்துகளில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் Footboard தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க முடியவில்லை. "ஏய் பொறம்போக்கு மேலே வா" என்று அன்பாகச் சொன்னாலும் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதிலிருக்கும் த்ரில் வேறெதிலும் இல்லை. தமிழக அரசும் என்னென்னவோ செய்து பார்த்து கடைசியில் சோதனை அடிப்படையில் படத்திலுள்ளவாறு பேரூந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது.

சிந்திங்க


தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை எவ்வாறு மாற்றியுள்ளது ?

என்பதற்கு ஒரு கருத்துப்படம் .

படித்தபோது நம்ப வில்லை ஆனால்???


நேற்று எனக்கொரு ஈமெயில் வந்தது அதை முடிந்த அளவு தமிழ் படுத்தி உள்ளேன்.இதை படிக்கும் போது என்னை போலவே நம்பிக்கை இல்லாமல் தான் நீங்களும் இருப்பீர்கள் ஆனால் முற்சி செய்து பாருங்கள்...இது கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவு அல்ல.. கம்ப்யூட்டர் சம்பந்தபட்டது..., விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மட்டும்...
சோதனை ஒன்று:-
உங்கள் கணிணியில் எத்தனையோ folder உருவாக்கியும் அளித்தும் இருப்பீர்கள் ஆனால் CON,COM1,NUL,AUX,PRN,LPT1 என்ற பெயரில் ஒரு folder உருவாக்கி பாருங்கள் முடிந்தால். கண்டிப்பாக உருவாக்க முடியாது. இதற்கான காரணத்தை யாராலும் விளக்க முடியவில்லை...
என்ன உருவாக்க முடிந்ததா...

சோதனை இரண்டு :-
முதலில் ஒரு empty notepad file ஓபன் பண்ணி கொள்ளவும். அதில் Bush hid the facts என்ற வாசகத்தை டைப் பண்ணவும் .அதான் பிறகு நீங்கள் விரும்பும் பெயரில் save பண்ணவும் . மீண்டும் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்...

சோதனை மூன்று :-
இது தான் ஹை லைட்...
ஒரு MS - WORD டாகுமென்ட் ஓபன் பண்ணி கொள்ளுங்கள்..
=rand (200, 99) இதை டைப் பண்ணவும்..,
பிறகு enter தட்டவும் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்..


உங்கள் கருத்தகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
பதிவு செய்தது உங்கள் கண்ணன் at 05/09/2010 11:55

கவிதைகாதலும் கவிதையும் பிறர் தர வாரா...

Saturday, September 4, 2010

கவனம்


நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி..


நன்றி : சே. சதாசிவம் {விகடனில் வெளிவந்தது}

நகைக் காதல்
துணிக்கடை நகைக்கடை இவை இரண்டை தவிர எல்லா இடங்களிலும் என்னவள்
என்னை காதலுடன் நோக்குகிறாள்.