பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும் எனக்கு சமிபத்துல ஒரு சட்டை அன்பளிப்பாக கிடைத்தது.
அது என் இணைய வழி தங்கை சிந்தியா கொடுத்தது . சிந்தியாவை பற்றி ஒரு அறிமுகம் உங்களுக்கு..
கடந்த முன்று வருடத்துக்கு முன்னால Yahoo Messenger Chat முலமாக அறிமுகமான என் தங்கை ... பிறகு கொஞ்ச நாள்ல மொபைல் நம்பர் பரிமாறிகிட்டோம் .. அவங்க பொதுவா போன் செய்தாலே அதில் கணினி சந்தகங்களை பற்றி வார்த்தை கண்டிப்பாக இருக்கும் அந்த அளவுக்கு கணினி மீது ஆர்வம் .
சரி அன்பளிப்பு சட்டை எதற்காக ??? என்றால் கடந்த மாதம் ரக்ஷபந்தனுகாக . ராக்கி மற்றும் ஒரு அழகான சட்டையை எனக்கு கிடைத்தது.
சிந்தியாவின் நண்பர்கள் எட்வின் ,ஹேமா,பானு மற்றும் பலர் அது Ever Time Jolly Group..
எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் அக்டோபர்19 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.
1. Sony Digital Camara (12x zoom)
2.APPLE Laptop
3.Kenwood Audio System (For My Car)
மறந்து விடாதீர்கள் October 19 தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும்.
பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என தெரிவித்து கொள்கிறேன்.
k na
ReplyDeletei ll give u a gift na
என் எழுத்துக்கு கொடுத்த மரியாதைக்கு நன்றி
ReplyDeleteஇனிய "தல" பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete