Kadal Kavidai

Saturday, March 12, 2011

இறைவனடி இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள்.
இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை.


சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அடிக்கடி வெளியூர் பயணம் தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும்.

சமிபத்தில் மலபார் கோல்ட் விளம்பரத்துக்கு இளையராஜா இசை அமைத்த அந்த பாடலை கேட்டு மயங்கினான் . சில நொடிகள் மட்டும் வரும் விளம்பர பாடலுக்கு மிக நன்றாக இசை அமைத்து என்னை வியக்க வைத்தார்.


ஆனால் அந்த பாடலின் மெட்டை எங்கோ நன்கு கேட்ட மாதிரி மனதுக்கு தோன்றியது. இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், அந்தபாடலை அவரது இசையில் வந்த ஒரு பாடலுடன் ஒபிட்டு என்னால் முடிந்தவரை இங்கே வெலிட்டுள்ளேன். நண்பர்கள் கேட்டு விட்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் .


Click here to Hear the Song

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே என்னை ஊக்கப் படுத்தும்.

Friday, March 4, 2011

பயணம்

எனது காரில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தாலும் எனக்கு எனது காரை நானே ஓட்டி செல்வதில் கொள்ளை பிரியம். அதுவும் இரவு நேரத்தில் இளையராஜா பாடல்களுடன் வண்டி ஒட்டுவது தனி சுகம். எனது அம்மா , அப்பா ,மனைவி உடன் நீண்ட தூரம் இரவு பயணம் செல்வது அலாதி சுகம். இதுமாதிரி எனக்கு பல்வேறு பயண அனுபவம் உண்டு. ஆனால் கடந்த மாதம் 16 ஆம் தேதி எனக்கு வித்தியாசமான , ஒரு உணர்சிபுர்வமான கார் ஒட்டும் பயணமாக அமைந்தது.

ஆம் எனது மனைவியை பிரசவத்துக்காக எனது மாமா ஊரில் இருந்து அருகில் உள்ள விளாத்திகுளம் சுமார் 25 KM வரை அழைத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்று காலை தான் சென்னையில் இருந்து சுமார் 580 Km பயணம் செய்து கோவில்பட்டிக்கு வந்தேன். முதல் நாள் பயண களைப்பையும் மீறி எனது மனைவி ஊருக்கு சென்றேன் .

என் மனைவிக்கு விளாத்திகுளம் அருகில் உள்ள சூரங்குடி தான் சொந்த ஊர். அங்கு இருந்து விளாத்திகுளம்25 KM சற்று மோசமான சாலை தான் . இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இரவு 10 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவவலி வர நான் பரபரப்பாக எனது காரில் மனைவியுடன் அந்த மோசமான ரோட்டில் 25 KM பயணம் செய்து விளாத்திகுளம் அடையும் போது எனக்கு உண்டான ஒரு உணர்சிபுர்வமான பயணம் என் வாழ்கைக்கு மறக்க முடியாத பணயமாக அமைந்தது .


18.02.2011 அன்று காலையில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் 24.02.2011 அன்று ஆஸ்பத்திரி இருந்து எனது மனைவி , மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு மீண்டும் சூரங்குடி செல்லும் போது எனது பயண அனுபவத்தை எனது மனைவியுடன் பேசி கொண்டு செல்லும் போது மனதுக்கு இதமாக இருந்தது .

அன்று மகாபாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக) சென்றான். அர்ஜுனன் போரில் வென்றான்.

இந்த கலயுகத்தில் கண்ணன் மித்திரனுக்கு காரோட்டியாக சென்றான் . மித்திரனும் தற்போது நாட்டில் நடக்கும் போட்டி, சூழ்ச்சி, வஞ்சகம் போன்ற பல செயல்களில் இருந்து வெற்றி பெறுவான் என நம்புகிறான் .