Kadal Kavidai

Wednesday, July 27, 2011

மொபைல் நம்பர் ?! எந்த நெட்வொர்க் ? எந்த ஏரியா?என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
http://en.wikipedia.org/wiki/Mobile_telephone_numbering_in_India


சரிதானே..?

Thursday, July 7, 2011

கல்மா "டீ"
சில வாரங்களுக்கு முன் ஞாநி கல்கியில் எழுதியது...

“திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”

தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.

‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”

தற்போது லேட்டஸ்ட் கல்மாடிக்கு டீ கொடுத்தவர் சஸ்பெண்ட் என்பது தான்.

ப்ரிட்டிஷ் ராஜ்யத்தில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்தமானின் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்போது இத்தாலிய காங்கிரஸ் ராஜ்யத்திலும் நான்கு பேர் அந்தமான் செல்லுலருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவும் ஒருவகை தண்டனைதான் என்றாலும், இவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக அங்கு அனுப்பப்படவில்லை, சிலரை சிறையில் சுதந்திரமாக இருக்க விட்டதற்காக.

ஐக்கிய ஊழல் கூட்டணியின் இரண்டாவது பகுதி ஆட்சிக்காலத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களில் இரண்டாமிடம் பெற்றுள்ள காமன்வெல்த் ஊழல்களின் சூத்ரதாரியாகக் கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இனிமேல் இவரை இனிமேலும் காபந்து செய்தால் ஆட்சி செலுத்துவது கடினம் என்ற மிகவும் கட்டாயமான சூழலில், இவர்மேல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் திஹார் சிறைவாசிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் திஹார் சிறைக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்துள்ளார். அப்போது, சுரேஷ் கல்மாடி சிறை அதிகாரி ஒருவரின் அறையில் மிகவும் சுதந்திரமாகச் சிரித்துப் பேசியபடி, டீ, பிஸ்கட் மற்றும் இதர ஸ்நாக்ஸ் வகையறாக்களை வகை தொகையின்றி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாராம். இது சிறை விதிகளின்படி அத்து மீறல் என்பதால், கல்மாடிக்கு டீ கொடுத்து உபசரித்த அதிகாரிகள் நால்வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்நால்வரும் அந்தமான் செல்லுலர் சிறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளியில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் சிறையிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றதால் வந்த வினை இது என்றாலும், அந்த நீதிபதி சுத்த விவரம் தெரியாதவராக இருப்பார் போலும். வெறுமனே டீ கொடுத்ததற்காக அந்தமானுக்கு மாற்றல் என்றால், தமிழக புழலில் நிகழும் வைபவங்களுக்காக அங்கிருக்கும் அதிகாரிகள் எங்கெங்கெல்லாம் மாற்றப்படுவர்? வாரமிருமுறை அரசாங்கமே அசைவ விருந்து போடுகிறது, தவிர சிறைக்குள் பல சட்டவிரோதமான வியாபாரங்களும் அமோகமாக நடக்கிறதென்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இருக்கவே இருக்கு அண்ணா பிறந்த நாள்... இதற்கு என்ன செய்வது?கல்மாடிக்கு சலுகை கொடுத்தவருக்கு, தண்டனை என்றால் ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?