





இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?
......எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.
‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’
‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’
‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’
‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன.
ஆனால் சிறுவயது முதல் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறு விதமாக இருந்தது.
"கொடியது கொடியது இளமையில் வறுமை. "
என்பதற்கு எடுத்துகாட்டு அனேகமாக நானாக தான் இருக்கும். வீட்டில் ஒரே ஆண் பிள்ளை என்றாலும் எனது எந்த ஒரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டியதாக நினைவு இல்லை.
பிறகு வசதி மற்றும் எனக்கு வேலை கிடைத்த பின் ஏனோ பிறந்த நாளுக்கு கேக் வெட்ட மணமில்லை.
எனது அப்பா மிக அதிகமாக சாமி கும்பிடும் பழக்கம் உடையவர். என்னையும் சாமி கும்பிட சொல்லுவர். ஒரு காலகட்டத்தில் இது ஒரு மூடநம்பிக்கை என்று உணர்த்த நான் பகுத்தறிவோடு கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன் . இதற்கு எனது காலம்சென்ற சித்தப்பா திரு முத்துசாமி தான் முன் உதாரணம் . (முத்துசாமி சித்தப்பா எனது அம்மாவின் சகோதரி கணவர்.) அவர் மாக்சிச சிந்தனை உடையவர். சேகு வேரா , லெனின் , பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை எனக்கு புத்தகம் வழியாக அறிமுக படித்தினார். அவர் முலமாக தமுஎச , DYFI போன்றவற்றில் என்னை இணைத்துகொண்டேன்.
பொதுவாக நங்கள் இருவரும் ஒன்றாக சென்று தான் தீபாவளி மற்றும் எங்கள் பிறந்த நாள் (எனக்கு 19 -10 சித்தப்பாவிற்கு 29 -10 ) க்கு துணி எடுப்போம்.வாழ்கை சக்கரம் சீராக சென்று கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு கொடிய புற்று நோய் தாக்கியது .நண்பன் ராமமூர்த்தி அப்பொழுது மருத்துவபடிப்பு படித்துகொண்டு இருந்தான். அவனிடம் புற்று நோய் பற்றி கேட்டபோது இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றான்.
பல இடங்களில் பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சென்னை Appollo மருத்துவமனை சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அப்போது சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை பற்றி தெரிந்து கொண்டேன்.
இந்த அடையாறு புற்று நோய் மருத்துவமனை மத்திய அரசிடம் நீதிகளை பெற்று புற்று நோய் தன்மைக்கு தகுந்தால் போல் இலவசமாக சிகிச்சை செய்கிறது. மேலும் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கதுக்காக மத்திய அரசிடம் இருந்தும் , பொது மகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று புற்று நோய்க்கு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
சித்தப்பா இறந்த பின் ஏனோ எனக்கு மீண்டும் பிறந்த நாள் கொண்டாட விருப்பம்இல்லை. எனவே அந்த தொகையை கடந்த சில வருடங்களாக அடையாறு புற்று நோய் மருத்துவ ஆராய்சிக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறேன் .
இந்த பதிவில் புகைபடத்தில் உள்ள அனைவரும் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமைக்கு நீரந்தர கொடையாளிகள். இந்த வரிசையில் நான் கடைசியாக இருப்பேன் என நம்புகிறேன்.
நான் இறபதற்கு முன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபட்டால் நான் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்...
எனவே நண்பர்களே உங்கள் வருமானத்தில் சிறு பகுதியாவது மருத்துவ ஆராய்ச்சி கொடுங்கள்.... இந்த பதிவை நான் எழுதிகொண்டிருக்கும் பொழுது புற்று நோயால் இறந்து விட்ட Apple Co -Founder Steve jobs அவர்களுக்கு எனது அஞ்சலியை சபர்பிகிறேன் ....
விழுவதும் ! எழுவதற்கே!!
Click Here to View Cancer Institute Web Page. இணைப்பு :
ஆண்டு வரிசையாக அடையாறு புற்று நோய் மருத்துவமனை நன்கொடை ரசிது.



