Kadal Kavidai

Friday, September 9, 2011

செங்கொடி

கொடிக்காக-தன்னை
கொளுத்தி கொண்ட உயிர் உண்டு ;
உயிர் காக்க - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடிஉண்டா ?

உண்டு ;
அதன் பெயர் செங்கொடி;
இனிமேல் -
அது தான் என் கொடி!



தொன்மை தமிழர் எல்லாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி; இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -
வெப்புள் விழுந்த கொடி!

இது தான் -
எனது
வணக்கத்துக்குரிய கொடி! இதை -
வணங்காது வேறெதற்கு முடி ?

முஉயிர் விடு ! ஈடாக என் -
பூ உயிர் எடு !
என்று
எமனிடம் தந்தாள் தன்னை ;
செங்கொடி கண்ணியானினும் - மூன்று
சேய்களை காத்த அன்னை !

ஆம்;
அந்த -
கன்னி தீயாநாள் ; தீயாக -
கன்னி தாயானாள்!

பெருவாரியான நாடுகள்
பெரும் பிழை புரிந்தோரையும் -
சிறையில் வைக்க முயலுமேயன்றி -
சிதையில் வைக்க முயலாது;
ஏன்
எனில் -
சிதையில் வைத்தது தாவென்றால்
சீவனை வழங்க இயலாது !
----
மரண தண்டனைக்குதான்
மரண தண்டனை தர வேண்டும் ;
மானுடர்க்கு
மரணம் -
கயிறு வலி யல்ல ;
காலன் வழிதான் வர வேண்டும்;
----
விழிநிறைய கனாகளுமாய் ;
விடைதெரியா வீனாகளுமாய் ;
இருவது ஆண்டுகள்
இறந்து போனபின் .......

இம் முவருக்கு
இன்னமும் மீதமாய் -
இருக்கும் வாழ்வையும் - கயிறு

சுருக்கம் என்றால் ....

அது -
அரக்கம்;
இருக்க வேண்டாம்மா -

இரக்கம்?
-----
'கண்ணுக்கு
கண் !' - எனும்
கருத்தை ஏற்காதவர்
காந்தி;
தபால்
தலையில் மட்டுமல்ல ;
நாம்
நடக்க வேண்டாம்மா - நம்
எண்ணத்திலும் தேசபிதாவை
ஏந்தி ?
----

செங்க்கொடியே! என் செல்ல மகளே !
சேவிக்க தகுந்துன் சேவடி துகளே !
ஒன்றுரைப்பேன் ; உன் தியாகத்திற்கு இல்லை
ஒப்பு ;
என்றாலும் - அதை
ஏற்பதுகில்லை ; அது தப்பு !.....

கவிஞர்
வாலி

1 comment:

  1. Sema Sharing na,sad lines from Vali..

    எனக்கு வைரமுத்து சொன்னது தான் ஞாபத்திற்கு வருகிறது,
    சாவே உனக்கு ஒரு சாவு வராதா?

    ReplyDelete