Kadal Kavidai

Tuesday, June 28, 2011

இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.



வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.


* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).

* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.

* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.

* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் இருக்க வேண்டும்.

* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.

கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும். அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

No comments:

Post a Comment