Kadal Kavidai

Tuesday, June 28, 2011

இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.



வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.


* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).

* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.

* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.

* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் இருக்க வேண்டும்.

* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.

கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும். அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

Thursday, June 16, 2011

கூகுள் குரோம் வெப்பிரவுசர்



கூகுள் குரோம் வெப்பிரவுசர்(google chrome browser) வழங்கும் வெப் ஸ்டோர்(Web Store) ல் பல அப்பிளிக்கேசன்ஸ்(applications) மற்றும் கேம்ஸ்(games) இலவசமாக கிடைக்கின்றன. அப்பிளிக்கேசன்ஸை எளிதாக இன்ஸ்டால் செய்து பிரவுசரிலேயே இயக்கலாம். இன்ஸ்டால் செய்த கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ் பிரவுசரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரவுசரை இயக்கி அப்பிளிகேசனை இயக்க முடியும். மேலும் பல தீம்கள்(themes) மற்றும் எக்ஸ்டென்ஸஸ்(extensions) குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன.



வெப் ஸ்டோர்(Web store)
https://chrome.google.com/webstore?hl=en-US


சில முக்கியமான கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ்
கோபக்கார பறவைகள்( Angry Birds )
https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en-US

பிரைவேட் ஜோ( Private Joe )
https://chrome.google.com/webstore/detail/bddhcbcefccaggaloclldffhobmecjfj?hl=en-US


குயிக் நோட்ஸ்(Quick Notes)
https://chrome.google.com/webstore/detail/mijlebbfndhelmdpmllgcfadlkankhok?hl=en-US

அட்வான்ஸ்டு இமேஜ் எடிட்டர்(Advanced Image Editor)
https://chrome.google.com/webstore/detail/dafkakmjmhfnnfclmjdfpnbmdeddkoeo?hl=en-US

குறிப்பு: இந்த அப்பிளிக்கேசன்ஸ் மற்றும் கேம்ஸ் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சிறப்பாக இயங்கும்.

Tuesday, May 31, 2011

என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...

பன்னையபுரத்தில் இருந்து கிளம்பிய இசை வேட்டு
பக்கின்கார்ம்க்கு போட்டது கோட்டு சூட்டு
MSV காலத்துல அவர் தான் யூத்
இன்று வரை அவர் இசைக்கு போட்டி இல்லை !
அவர் மகன் யுவனையும் சேர்த்து! !

வருகிற ஜூன் 3 ஆம் தேதி என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...
அவருக்கு எனது பிறந்த நாள் பரிசு தான் மேலே நீங்கள் வாசித்த கவிதை.






Wednesday, April 27, 2011

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..

கலைஞர் கருணாநிதி கவிதை (அண்ணா கவிதாஞ்சலி )

நம் முதல்வர் அவர்கள் மறைந்த அண்ணாதுரை இறந்த பொது எழுதிய கவிதை, அதில் இருந்து சில வரிகளை இங்கே ......



எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?



தற்போது தி மு கழகத்தில் நடைபெறும் 2 ஆம் அலைகற்றை பிரச்னையை மனதில் வைத்து மேற்கண்ட வரிகளை மீண்டும் படித்து பாருங்கள் ..... என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை ..........

Saturday, March 12, 2011

இறைவனடி இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள்.
இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை.


சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அடிக்கடி வெளியூர் பயணம் தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும்.

சமிபத்தில் மலபார் கோல்ட் விளம்பரத்துக்கு இளையராஜா இசை அமைத்த அந்த பாடலை கேட்டு மயங்கினான் . சில நொடிகள் மட்டும் வரும் விளம்பர பாடலுக்கு மிக நன்றாக இசை அமைத்து என்னை வியக்க வைத்தார்.


ஆனால் அந்த பாடலின் மெட்டை எங்கோ நன்கு கேட்ட மாதிரி மனதுக்கு தோன்றியது. இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், அந்தபாடலை அவரது இசையில் வந்த ஒரு பாடலுடன் ஒபிட்டு என்னால் முடிந்தவரை இங்கே வெலிட்டுள்ளேன். நண்பர்கள் கேட்டு விட்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் .


Click here to Hear the Song

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே என்னை ஊக்கப் படுத்தும்.

Friday, March 4, 2011

பயணம்

எனது காரில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தாலும் எனக்கு எனது காரை நானே ஓட்டி செல்வதில் கொள்ளை பிரியம். அதுவும் இரவு நேரத்தில் இளையராஜா பாடல்களுடன் வண்டி ஒட்டுவது தனி சுகம். எனது அம்மா , அப்பா ,மனைவி உடன் நீண்ட தூரம் இரவு பயணம் செல்வது அலாதி சுகம். இதுமாதிரி எனக்கு பல்வேறு பயண அனுபவம் உண்டு. ஆனால் கடந்த மாதம் 16 ஆம் தேதி எனக்கு வித்தியாசமான , ஒரு உணர்சிபுர்வமான கார் ஒட்டும் பயணமாக அமைந்தது.

ஆம் எனது மனைவியை பிரசவத்துக்காக எனது மாமா ஊரில் இருந்து அருகில் உள்ள விளாத்திகுளம் சுமார் 25 KM வரை அழைத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்று காலை தான் சென்னையில் இருந்து சுமார் 580 Km பயணம் செய்து கோவில்பட்டிக்கு வந்தேன். முதல் நாள் பயண களைப்பையும் மீறி எனது மனைவி ஊருக்கு சென்றேன் .

என் மனைவிக்கு விளாத்திகுளம் அருகில் உள்ள சூரங்குடி தான் சொந்த ஊர். அங்கு இருந்து விளாத்திகுளம்25 KM சற்று மோசமான சாலை தான் . இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இரவு 10 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவவலி வர நான் பரபரப்பாக எனது காரில் மனைவியுடன் அந்த மோசமான ரோட்டில் 25 KM பயணம் செய்து விளாத்திகுளம் அடையும் போது எனக்கு உண்டான ஒரு உணர்சிபுர்வமான பயணம் என் வாழ்கைக்கு மறக்க முடியாத பணயமாக அமைந்தது .


18.02.2011 அன்று காலையில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் 24.02.2011 அன்று ஆஸ்பத்திரி இருந்து எனது மனைவி , மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு மீண்டும் சூரங்குடி செல்லும் போது எனது பயண அனுபவத்தை எனது மனைவியுடன் பேசி கொண்டு செல்லும் போது மனதுக்கு இதமாக இருந்தது .

அன்று மகாபாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக) சென்றான். அர்ஜுனன் போரில் வென்றான்.

இந்த கலயுகத்தில் கண்ணன் மித்திரனுக்கு காரோட்டியாக சென்றான் . மித்திரனும் தற்போது நாட்டில் நடக்கும் போட்டி, சூழ்ச்சி, வஞ்சகம் போன்ற பல செயல்களில் இருந்து வெற்றி பெறுவான் என நம்புகிறான் .

Wednesday, February 2, 2011

ஒரு முக்கிய ஆலோசனை முகாம்

வருகின்ற 09/02/2011 அன்று சென்னைல ஒரு முக்கிய ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. முகாமில் ஆண்கள் (25 வயதுக்கு மேல்) அனைவரும் படத்தில் உள்ள கோரிக்கைகளை நன்கு படித்திவிட்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

Thursday, January 6, 2011

சந்தோஷ கல்யாணம்.

பெண்பார்க்கும் படலம்

இல்லாமல்;

வரதட்சணை, ரொக்கம்

இல்லாமல்;

பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி

இல்லாமல்;

மாப்பிள்ளை `முறுக்கு’

இல்லாமல்;

பெண்ணுக்கு செயற்கைபூச்சு, ஒப்பனை

இல்லாமல்;

பயமும் பதட்டமும்

இல்லாமல்;

பிள்ளைகள் பெற்றோருக்கு

செய்து வைக்கும் ஒரு

சந்தோஷ கல்யாணம்;

அப்பா அம்மாவின்

அறுபதாங் கல்யாணம்.


குறிப்பு
வருகின்ற 19-01-2011 அன்று எனது அப்பா அம்மாவின் அறுபதாங் கல்யாணம்.





Thursday, December 30, 2010

வா வா & தா தா





வா வா & தா தா
இனி எங்கள் வாழ்வில்
அகமலர்ச்சி தான்
ஆனந்த பெருக்கு தான்
இன்ப வெள்ளம் தான்
உற்சாக ஊற்று தான்
எக்களிப்பு தான்
ஏமம் தான்
ஒக்கலிப்புகள் தான்
ஓகை தான்
மொத்தமாக சில்லரையாக சுருக்கமாக
எங்கும் எதிலும் சந்தோஷம் தான்
வா வா புத்தாண்டே வா வா
தா தா புத்து ணர்வினை தா தா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011
- கண்ணன்

Monday, December 13, 2010

இசை பிரியர்களுக்கு மட்டும் .....

கொஞ்ச நாளா வேலை பளு காரணமாக ஒரு பதிவு கூட போட முடியல ...... நண்பர்கள் மனிக்கவும்... இது இசை பிரியர்களுக்கு... அதாவது வானொலி பண்பலை (FM) கேட்பது எனக்கு புடிக்கும்.. உலகில் உள்ள அணைத்து பண்பலை அலைவசிசையும் ஒரு தளத்தில் (Website) உள்ளது ... (Norway, Elam,Canada,Singapore,Srilanka,Germany,London BBC) ஆகிய தமிழ் ஒழிபரப்பு நிகழ்சிகளை கொஞ்சம் கேட்டு பாருங்கள் .....

இணைப்பு

http://www.tamilfms.com/





Wednesday, November 17, 2010

நான் ஒரு நக்சலைட்




" ஆலை அரசுகள் சோலை மிராசுகள்

பாலில் மிதந்தது போதும் - இங்கு

வேலை இழந்தவர் வீதி முனைகளில்

கூழுக்கலைவதை பாரும் - அவர்

கூட்டத்தை ஓரணி சேரும் ......"



இவை 1968-69 வாக்கில் என் கவிகுருநாதன் கண்ணதாசன் எழுதிய வரிகள் . அவர் நடத்திய "கண்ணதாசன்" என்ற இலக்கிய இதழில் வெளிவந்தது . இந்த கவிதைக்கு அவர் கொடுத்த தலைப்பு "நான் ஒரு நக்சலிட் !!"


மத்தபடி கவிதை தலைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை

Monday, November 15, 2010

என்ன செய்ய ? - கவிதை



கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.




இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி...


ஆனால்....

பூ விழுந்தால் போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!



இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !


Friday, November 12, 2010

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா



1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது. இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்? இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை. பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது. இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்? ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'...

Thursday, October 28, 2010

அஞ்சலி


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல


விலகாமல் என்றென்றும்..


29-10-2010 அன்று உன் பிறந்த நாள் நினைவாக....







Thursday, October 21, 2010

நன்றி



கடந்த 19-10-2010 அன்று என் பிறந்தநாள் அன்று என் Cell Phone , Yahoo,Orkut,Facebook க்கு காலை முதல் மாலை வரை வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் நன்றி....


நாளொன்றும் மற்றைய நாட்களிலிருந்து வேறுபட்டது இல்லை என்றாலும் வழக்கத்திலிருந்து மாற்றாக ஒரு வேறுபடுத்த சில சமயம் தேவையாயிருக்கிறது.

நேற்றைய மாலைக்கு
இன்றைய காலையும்
பிற்பகல் நினைவில்
இன்றைய காலையும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்னால்
திரும்பிப்பார்த்தால் 29 வயசு


Sunday, October 10, 2010

திருமணம்!


திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

Saturday, September 11, 2010

அறிவிப்பு


பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும் எனக்கு சமிபத்துல ஒரு சட்டை அன்பளிப்பாக கிடைத்தது.


அது என் இணைய வழி தங்கை சிந்தியா கொடுத்தது . சிந்தியாவை பற்றி ஒரு அறிமுகம் உங்களுக்கு..

கடந்த முன்று வருடத்துக்கு முன்னால Yahoo Messenger Chat முலமாக அறிமுகமான என் தங்கை ... பிறகு கொஞ்ச நாள் மொபைல் நம்பர் பரிமாறிகிட்டோம் .. அவங்க பொதுவா போன் செய்தாலே அதில் கணினி சந்தகங்களை பற்றி வார்த்தை கண்டிப்பாக இருக்கும் அந்த அளவுக்கு கணினி மீது ஆர்வம் .

சரி அன்பளிப்பு சட்டை எதற்காக ??? என்றால் கடந்த மாதம் ரக்ஷபந்தனுகாக . ராக்கி மற்றும் ஒரு அழகான சட்டையை எனக்கு கிடைத்தது.

சிந்தியாவின் நண்பர்கள் எட்வின் ,ஹேமா,பானு மற்றும் பலர் அது Ever Time Jolly Group..

எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் அக்டோபர்19 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.
1. Sony Digital Camara (12x zoom)
2.APPLE Laptop
3.Kenwood Audio System (For My Car)

மறந்து விடாதீர்கள் October 19 தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும்.

பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என தெரிவித்து கொள்கிறேன்.