Kadal Kavidai

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, October 8, 2011

என் தந்தை


தோற்றம் 25/12/1950 மறைவு 02/10/2011



தந்தை!
நமது முகவரி !
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமையத்தின் வலிமை,
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள் தாங்கும்,
என் தந்தை குணம்!
யாரிடம் கிடைக்கும்!!

என் தந்தை மரணம்,
சொல்லமுடியாத, இழப்பு !
இந்த இழப்பை சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை !!

மனம் பின்னோக்கி செல்லும்
தந்தையோடு வாழ்த்த, அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும் !

அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !!

Friday, September 9, 2011

செங்கொடி

கொடிக்காக-தன்னை
கொளுத்தி கொண்ட உயிர் உண்டு ;
உயிர் காக்க - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடிஉண்டா ?

உண்டு ;
அதன் பெயர் செங்கொடி;
இனிமேல் -
அது தான் என் கொடி!



தொன்மை தமிழர் எல்லாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி; இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -
வெப்புள் விழுந்த கொடி!

இது தான் -
எனது
வணக்கத்துக்குரிய கொடி! இதை -
வணங்காது வேறெதற்கு முடி ?

முஉயிர் விடு ! ஈடாக என் -
பூ உயிர் எடு !
என்று
எமனிடம் தந்தாள் தன்னை ;
செங்கொடி கண்ணியானினும் - மூன்று
சேய்களை காத்த அன்னை !

ஆம்;
அந்த -
கன்னி தீயாநாள் ; தீயாக -
கன்னி தாயானாள்!

பெருவாரியான நாடுகள்
பெரும் பிழை புரிந்தோரையும் -
சிறையில் வைக்க முயலுமேயன்றி -
சிதையில் வைக்க முயலாது;
ஏன்
எனில் -
சிதையில் வைத்தது தாவென்றால்
சீவனை வழங்க இயலாது !
----
மரண தண்டனைக்குதான்
மரண தண்டனை தர வேண்டும் ;
மானுடர்க்கு
மரணம் -
கயிறு வலி யல்ல ;
காலன் வழிதான் வர வேண்டும்;
----
விழிநிறைய கனாகளுமாய் ;
விடைதெரியா வீனாகளுமாய் ;
இருவது ஆண்டுகள்
இறந்து போனபின் .......

இம் முவருக்கு
இன்னமும் மீதமாய் -
இருக்கும் வாழ்வையும் - கயிறு

சுருக்கம் என்றால் ....

அது -
அரக்கம்;
இருக்க வேண்டாம்மா -

இரக்கம்?
-----
'கண்ணுக்கு
கண் !' - எனும்
கருத்தை ஏற்காதவர்
காந்தி;
தபால்
தலையில் மட்டுமல்ல ;
நாம்
நடக்க வேண்டாம்மா - நம்
எண்ணத்திலும் தேசபிதாவை
ஏந்தி ?
----

செங்க்கொடியே! என் செல்ல மகளே !
சேவிக்க தகுந்துன் சேவடி துகளே !
ஒன்றுரைப்பேன் ; உன் தியாகத்திற்கு இல்லை
ஒப்பு ;
என்றாலும் - அதை
ஏற்பதுகில்லை ; அது தப்பு !.....

கவிஞர்
வாலி

Tuesday, May 31, 2011

என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...

பன்னையபுரத்தில் இருந்து கிளம்பிய இசை வேட்டு
பக்கின்கார்ம்க்கு போட்டது கோட்டு சூட்டு
MSV காலத்துல அவர் தான் யூத்
இன்று வரை அவர் இசைக்கு போட்டி இல்லை !
அவர் மகன் யுவனையும் சேர்த்து! !

வருகிற ஜூன் 3 ஆம் தேதி என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...
அவருக்கு எனது பிறந்த நாள் பரிசு தான் மேலே நீங்கள் வாசித்த கவிதை.






Wednesday, April 27, 2011

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..

கலைஞர் கருணாநிதி கவிதை (அண்ணா கவிதாஞ்சலி )

நம் முதல்வர் அவர்கள் மறைந்த அண்ணாதுரை இறந்த பொது எழுதிய கவிதை, அதில் இருந்து சில வரிகளை இங்கே ......



எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?



தற்போது தி மு கழகத்தில் நடைபெறும் 2 ஆம் அலைகற்றை பிரச்னையை மனதில் வைத்து மேற்கண்ட வரிகளை மீண்டும் படித்து பாருங்கள் ..... என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை ..........

Thursday, January 6, 2011

சந்தோஷ கல்யாணம்.

பெண்பார்க்கும் படலம்

இல்லாமல்;

வரதட்சணை, ரொக்கம்

இல்லாமல்;

பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி

இல்லாமல்;

மாப்பிள்ளை `முறுக்கு’

இல்லாமல்;

பெண்ணுக்கு செயற்கைபூச்சு, ஒப்பனை

இல்லாமல்;

பயமும் பதட்டமும்

இல்லாமல்;

பிள்ளைகள் பெற்றோருக்கு

செய்து வைக்கும் ஒரு

சந்தோஷ கல்யாணம்;

அப்பா அம்மாவின்

அறுபதாங் கல்யாணம்.


குறிப்பு
வருகின்ற 19-01-2011 அன்று எனது அப்பா அம்மாவின் அறுபதாங் கல்யாணம்.





Thursday, December 30, 2010

வா வா & தா தா





வா வா & தா தா
இனி எங்கள் வாழ்வில்
அகமலர்ச்சி தான்
ஆனந்த பெருக்கு தான்
இன்ப வெள்ளம் தான்
உற்சாக ஊற்று தான்
எக்களிப்பு தான்
ஏமம் தான்
ஒக்கலிப்புகள் தான்
ஓகை தான்
மொத்தமாக சில்லரையாக சுருக்கமாக
எங்கும் எதிலும் சந்தோஷம் தான்
வா வா புத்தாண்டே வா வா
தா தா புத்து ணர்வினை தா தா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011
- கண்ணன்

Wednesday, November 17, 2010

நான் ஒரு நக்சலைட்




" ஆலை அரசுகள் சோலை மிராசுகள்

பாலில் மிதந்தது போதும் - இங்கு

வேலை இழந்தவர் வீதி முனைகளில்

கூழுக்கலைவதை பாரும் - அவர்

கூட்டத்தை ஓரணி சேரும் ......"



இவை 1968-69 வாக்கில் என் கவிகுருநாதன் கண்ணதாசன் எழுதிய வரிகள் . அவர் நடத்திய "கண்ணதாசன்" என்ற இலக்கிய இதழில் வெளிவந்தது . இந்த கவிதைக்கு அவர் கொடுத்த தலைப்பு "நான் ஒரு நக்சலிட் !!"


மத்தபடி கவிதை தலைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை

Monday, November 15, 2010

என்ன செய்ய ? - கவிதை



கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.




இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி...


ஆனால்....

பூ விழுந்தால் போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!



இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !


Thursday, October 28, 2010

அஞ்சலி


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல


விலகாமல் என்றென்றும்..


29-10-2010 அன்று உன் பிறந்த நாள் நினைவாக....







Thursday, October 21, 2010

நன்றி



கடந்த 19-10-2010 அன்று என் பிறந்தநாள் அன்று என் Cell Phone , Yahoo,Orkut,Facebook க்கு காலை முதல் மாலை வரை வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் நன்றி....


நாளொன்றும் மற்றைய நாட்களிலிருந்து வேறுபட்டது இல்லை என்றாலும் வழக்கத்திலிருந்து மாற்றாக ஒரு வேறுபடுத்த சில சமயம் தேவையாயிருக்கிறது.

நேற்றைய மாலைக்கு
இன்றைய காலையும்
பிற்பகல் நினைவில்
இன்றைய காலையும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்னால்
திரும்பிப்பார்த்தால் 29 வயசு


Sunday, October 10, 2010

திருமணம்!


திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

Sunday, September 5, 2010

கவிதை



காதலும் கவிதையும் பிறர் தர வாரா...

Saturday, September 4, 2010

கவனம்


நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி..


நன்றி : சே. சதாசிவம் {விகடனில் வெளிவந்தது}

நகைக் காதல்




துணிக்கடை நகைக்கடை இவை இரண்டை தவிர எல்லா இடங்களிலும் என்னவள்
என்னை காதலுடன் நோக்குகிறாள்.

காவேரி

பார்த்ததும் படித்ததும் .

காவேரியை கடக்க ஓடம் தேவை இல்லை இனி ஒட்டகம் தான் தேவை.