Kadal Kavidai

Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Friday, March 2, 2012

குடும்ப அட்டை புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு


குடும்ப அட்டை புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு.

இணையத்திலும் பதியலாம்


click here for the link

Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஆண்டுகளால் மனிதர்கள் பெருமை பெறுவதில்லை;
மனிதர்களால்தான் ஆண்டுகள் பெருமை பெறுகின்றன
செயல்களால் புத்தாண்டை உயர்த்துவோம்.

வாழ்த்துக்கள்
வைரமுத்து.- on Twitter.

Friday, December 23, 2011

வைரமுத்து அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்``படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்''
கவிஞர் வைரமுத்து அறிக்கை


சென்னை, டிச.22-

``முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.



அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

``முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் ïனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

படைப்பாளிகள்

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். ``முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்

Sunday, November 13, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி
இது.





108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.


ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.


நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.


இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: ஹிந்து நாளிதழ்

Friday, October 14, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

......

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.
‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன.

ஆனால் சிறுவயது முதல் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறு விதமாக இருந்தது.

"கொடியது கொடியது இளமையில் வறுமை. "

என்பதற்கு எடுத்துகாட்டு அனேகமாக நானாக தான் இருக்கும். வீட்டில் ஒரே ஆண் பிள்ளை என்றாலும் எனது எந்த ஒரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டியதாக நினைவு இல்லை.

பிறகு வசதி மற்றும் எனக்கு வேலை கிடைத்த பின் ஏனோ பிறந்த நாளுக்கு கேக் வெட்ட மணமில்லை.

எனது அப்பா மிக அதிகமாக சாமி கும்பிடும் பழக்கம் உடையவர். என்னையும் சாமி கும்பிட சொல்லுவர். ஒரு காலகட்டத்தில் இது ஒரு மூடநம்பிக்கை என்று உணர்த்த நான் பகுத்தறிவோடு கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன் . இதற்கு எனது காலம்சென்ற சித்தப்பா திரு முத்துசாமி தான் முன் உதாரணம் . (முத்துசாமி சித்தப்பா எனது அம்மாவின் சகோதரி கணவர்.) அவர் மாக்சிச சிந்தனை உடையவர். சேகு வேரா , லெனின் , பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை எனக்கு புத்தகம் வழியாக அறிமுக படித்தினார். அவர் முலமாக தமுஎச , DYFI போன்றவற்றில் என்னை இணைத்துகொண்டேன்.

பொதுவாக நங்கள் இருவரும் ஒன்றாக சென்று தான் தீபாவளி மற்றும் எங்கள் பிறந்த நாள் (எனக்கு 19 -10 சித்தப்பாவிற்கு 29 -10 ) க்கு துணி எடுப்போம்.வாழ்கை சக்கரம் சீராக சென்று கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு கொடிய புற்று நோய் தாக்கியது .நண்பன் ராமமூர்த்தி அப்பொழுது மருத்துவபடிப்பு படித்துகொண்டு இருந்தான். அவனிடம் புற்று நோய் பற்றி கேட்டபோது இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றான்.

பல இடங்களில் பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சென்னை Appollo மருத்துவமனை சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அப்போது சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த அடையாறு புற்று நோய் மருத்துவமனை மத்திய அரசிடம் நீதிகளை பெற்று புற்று நோய் தன்மைக்கு தகுந்தால் போல் இலவசமாக சிகிச்சை செய்கிறது. மேலும் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கதுக்காக மத்திய அரசிடம் இருந்தும் , பொது மகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று புற்று நோய்க்கு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

சித்தப்பா இறந்த பின் ஏனோ எனக்கு மீண்டும் பிறந்த நாள் கொண்டாட விருப்பம்இல்லை. எனவே அந்த தொகையை கடந்த சில வருடங்களாக அடையாறு புற்று நோய் மருத்துவ ஆராய்சிக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறேன் .

இந்த பதிவில் புகைபடத்தில் உள்ள அனைவரும் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமைக்கு நீரந்தர கொடையாளிகள். இந்த வரிசையில் நான் கடைசியாக இருப்பேன் என நம்புகிறேன்.

நான் இறபதற்கு முன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபட்டால் நான் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்...

எனவே நண்பர்களே உங்கள் வருமானத்தில் சிறு பகுதியாவது மருத்துவ ஆராய்ச்சி கொடுங்கள்.... இந்த பதிவை நான் எழுதிகொண்டிருக்கும் பொழுது புற்று நோயால் இறந்து விட்ட Apple Co -Founder Steve jobs அவர்களுக்கு எனது அஞ்சலியை சபர்பிகிறேன் ....

விழுவதும் ! எழுவதற்கே!!

Click Here to View Cancer Institute Web Page.



இணைப்பு :
ஆண்டு வரிசையாக அடையாறு புற்று நோய் மருத்துவமனை நன்கொடை ரசிது.









Saturday, October 8, 2011

என் தந்தை


தோற்றம் 25/12/1950 மறைவு 02/10/2011



தந்தை!
நமது முகவரி !
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமையத்தின் வலிமை,
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள் தாங்கும்,
என் தந்தை குணம்!
யாரிடம் கிடைக்கும்!!

என் தந்தை மரணம்,
சொல்லமுடியாத, இழப்பு !
இந்த இழப்பை சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை !!

மனம் பின்னோக்கி செல்லும்
தந்தையோடு வாழ்த்த, அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும் !

அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !!

Thursday, September 29, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

காத்திருங்கள் ...... அக்டோபர் 19 வரை ......


Saturday, September 11, 2010

அறிவிப்பு


பொதுவா மனிதர்களிடத்தில் அன்பை பிரதிபலிப்பதற்கு என்று வைத்திருக்கும் வழிகள் பல இருந்தாலும் அதில் அன்பளிப்பு என்ற வழி தான் பெரும்பாலும் பின்பற்றபடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. கொடுக்கிற அன்பளிப்பு வாங்குறவங்களுக்கு உபயோகமா இருக்கணும்கறது தான் எல்லாரோட நினைப்பா இருக்கும் எனக்கு சமிபத்துல ஒரு சட்டை அன்பளிப்பாக கிடைத்தது.


அது என் இணைய வழி தங்கை சிந்தியா கொடுத்தது . சிந்தியாவை பற்றி ஒரு அறிமுகம் உங்களுக்கு..

கடந்த முன்று வருடத்துக்கு முன்னால Yahoo Messenger Chat முலமாக அறிமுகமான என் தங்கை ... பிறகு கொஞ்ச நாள் மொபைல் நம்பர் பரிமாறிகிட்டோம் .. அவங்க பொதுவா போன் செய்தாலே அதில் கணினி சந்தகங்களை பற்றி வார்த்தை கண்டிப்பாக இருக்கும் அந்த அளவுக்கு கணினி மீது ஆர்வம் .

சரி அன்பளிப்பு சட்டை எதற்காக ??? என்றால் கடந்த மாதம் ரக்ஷபந்தனுகாக . ராக்கி மற்றும் ஒரு அழகான சட்டையை எனக்கு கிடைத்தது.

சிந்தியாவின் நண்பர்கள் எட்வின் ,ஹேமா,பானு மற்றும் பலர் அது Ever Time Jolly Group..

எதுக்குடா சம்பந்தமே இல்லாம இதெல்லாம் சொல்றேன்னு பாக்குறேங்களா. இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பிறந்த நாள் அக்டோபர்19 வருது.அதனால தான். எனக்கு அன்பளிப்பு தர நினைக்கும் நண்பர்கள்,தோழியர்கள், கடைக்கு செல்லும் முன் இந்த லிஸ்டை அச்சிட்டு [PRINTOUT] செல்லுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.
1. Sony Digital Camara (12x zoom)
2.APPLE Laptop
3.Kenwood Audio System (For My Car)

மறந்து விடாதீர்கள் October 19 தேதி.தேவை இல்லாமல் உருவாகும் வீண் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும்.

பின் குறிப்பு:-
இது எதையுமே அன்பளிப்பா கொடுக்காம ஒரு குறுந்தகவல், ஒரு மின்னஞ்சல், அட ஒரு பின்னுட்டம், ஒரு கால் பண்ணி வாழ்த்து சொன்ன கூட எந்த தர்ம சங்கடமும் எனக்கு ஏற்படாது எனவும், நான் இந்த வாழ்த்திற்கே மிகவும் மகிழ்வேன் என தெரிவித்து கொள்கிறேன்.